Sunday, May 19, 2013

இல்லறம் இனிக்க இல்லறம் நல்லறமாக தொடர் -1

இல்லறம் இனிக்க 01அவள் உனது ஆடை....


இல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும். ஏனெனில், பசுமையான பூமியில் தான் பயிர் பச்சகைள் விளையும். கறடு முறடான பூமி முற்புதர்களையும் களைகளையும் தான் முளைக்கச் செய்யும். எனவே, இல்லறம் குறித்த நல்ல வழிகாட்டல் தேவை. அந்த வழி காட்டல்களை இஸ்லாம் இனிதே வழங்குகின்றது.

அல்குர்ஆன் பல விடயங்களை உதாரணங்கள் மூலமாகவும், உவமானங்கள் மூலமாகவும் விளக்குவதுண்டு. அவ்வகையில் “ஆடை” என்ற ஒப்புவமையை இரவு, இறையச்சம் என்பவற்றுக்கு அல்குர்ஆன் உவமிக்கின்றது. இவ்வாறே கணவன் மனைவி என்கிற உறவையும் இஸ்லாம் ஆடைக்கு ஒப்பிடுகின்றது.

“(மனைவியர்களான) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், (கணவர்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்”. 2:187

மேற்படி வசனம் கணவனை மனைவியின் ஆடை என்றும் மனைவியைக் கணவனின் ஆடை என்றும் கூறுகின்றது. மேற்கத்தேய நாடுகளில் ஆடை மாற்றுவது போல் தமது சோடிகளை மாற்றுவதை இதற்கு நாம் விளக்கமாகக் கொள்ள முடியாது. நாம் ஆடை விடயத்தில் கடைப்பிடிக்கும் நோக்குகள் குறித்து நிதானமாகச் சிந்தித்தால் “ஆடை” என்ற உவமானம் கணவன் மனைவி உறவுக்கு எவ்வளவு தூரம் ஒத்துப்போகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆடை மானம் காக்கும், அவள் கற்பைக் காப்பாள் ஆடை அணிவதன் அடிப்படை நோக்கம் மானத்தை மறைப்பதாகும். ஆடை இல்லாதவன் அவமானப்பட நேரிடும். இல்லறத்தின் அடிப்படை நோக்கம் கற்பைக் காப்பதாகும். அது இல்லா தவன் கற்புத் தவறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.

“இளைஞர்களே! உங்களில் வாய்ப் புள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில், அது பார்வையைத் தாழ்த்தச் செய்யும், கற்பைக் காக்கும்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம்:திர்மிதி, நஸஈ, அபூதாவூத், இப்னு மாஜா

வாழ்க்கைத் துணையில்லாத நிலை ஆடையற்ற வாழ்வுக்குச் சமனாகும். எனவே, ஆடை அணியத் தயாராகுங்கள்.


ஆடைத் தெரிவு :

நாம் ஆடையைத் தெரிவு செய்யும் போது பலவிதமான அம்சங்களைக் கவனத்தில் கொள்கின்றோம். எமக்கு ஆடை அளவாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றோம். அன்றாடம் கூலித் தொழில் செய்யும் ஒருவன் ஆயிரக்கணக்குப் பெறுமதியான ஆடைகளைத் தெரிவு செய்வதில்லை. தன் வருமானத்திற்கு ஏற்றதாக ஆடையைத் தெரிவு செய்கின்றான்.

இவ்வாறே எமது தகுதிக்குத் தக்கதாக ஆடையைத் தெரிவு செய்கின்றோம், மூட்டை சுமக்கும் ஒருவர் கோட் சூட்டைத் தெரிவு செய்யமாட்டார். தெரிவு செய்தாலும் அதற்கேற்ற வாழ்க்கை அவரால் வாழ முடியாது. சாதாரணமாக கோட் சூட் அணிந்த ஒருவனால் மக்கள் நிரம்பி வழியும் போது வாகனத்தில் பயணிக்க முடியாது. சொந்தமாக வாகனம் பிடித்துச் செல்ல வேண்டும். ஒரு பிச்சைக்காரன் தட்டை நீட்டினால் கூட தான் அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ப உதவி செய்ய நேரிடும்.

அடுத்து எமது நிறம், தொழில் என்பவற்றுக்கெல்லாம் தோதான ஆடையையே தெரிவு செய்கின்றோம். ஒரு ஆடைத் தெரிவுக்கே இவ்வாறான முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்றால் வாழ்க்கைத் துணை எனும் ஆடையைத் தெரிவு செய்ய இதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக அவதானம் செலுத்த வேண்டும்.

சிலர் தமது தகுதிக்கு மீறி பணக்கார பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அதற்கேற்ப வாழ முடியாமல் விழி பிதுங்கி நிற்பதை நாம் அனுபவ வாயிலாக கண்டு வருகின்றோம். அந்தப் பெண் பணக்கார வாழ்வுக்குப் பழக்கப்பட்டிருப்பாள், அவளது தகுதிக்கு ஏற்ப செலவு கொடுக்க முடியாமல் இவன் திண்டாடுவான். அந்தப் பெண் பணக்கார நட்புகளை ஏற்படுத்தியிருப்பாள். எந்த பணக்கார நட்புக்களுடனும் உறவுகளுடனும் இணைந்து செல்ல முடியாமல் இவன் திண்டாடுவான். இவன் வீட்டு விஷேசங்களுக்குப் பணக்காரர்களை அழைக்க நேரிடும். அவர்கள் அவர்களது தகுதிக்கு ஏற்ப அன்பளிப்புக்கள் வழங்குவர். அதேபோன்று அவர்கள் தமது விஷேசங்களுக்கு இவனுக்கு அழைப்பு விடுப்பர். இவன் தனது தகுதிற்கு ஏற்ப அன்பளிப்பு வழங்க முடியாது என்று கௌரவப் பிரச்சினை பார்ப்பான். மனைவியின் தகுதிக்கு ஏற்ப அன்பளிப்பு வழங்க பொருளாதாரம் இடம் கொடுக்காது. இவ்வாறான இக்கட்டுக்களுடன் வாழும் ஒருவனது இல்லறம் இனிமையானதாக இருக்காது. எனவே, மனைவிகணவன் எனும் ஆடையைத் தெரிவு செய்யும் போது மிகுந்த நிதானம் தேவை.

“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவையாவன ;
அவளது பணத்திற்காக,
அவளது குடும்ப கௌரவத்திற்காக,
அவளது அழகிற்காக,
அவளது மார்க்க விழுமியங்களுக்காக.
நீர் மார்க்க முடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்வாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

எனவே, அழிவிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள மார்க்கமுடைய துணையைத் தெரிவு செய்வோமாக!

இன்ஷாஅல்லாஹ் தொடரும் :-

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) 

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி

( பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான, வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா) 

என்று கூறுவாரானால் அவ்வுரவில் அவ்விருவருக்கும் குழந்தை பாக்கியம் ஏற்பட்டால் அந்தக் குழந்தை ஷைத்தான் எப்போதும் திண்ட மாட்டான்' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி

உடலுறவுக்கு முன்பு பிஸ்மில்லாஹ் கூறுவதுடன் நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த இந்த துவாவை கண்டிப்பாக கூர வேண்டும். 

துவாவின் பொருள்: அல்லாஹ்வின் பெயர் கூறி (இதில் ஈடுபடுகிறேன்) இறைவா ! ஷைத்தானை விட்டும் எங்களை அகற்றிவிடு ! நீ எங்களுக்கு வழங்கக்கூடிய குழந்தையும்ஷைத்தானை விட்டும் அகற்றிவிடு! 


 சுயஇன்பம் மூலம் இச்சையைத் தனிக்கலாமா? (பாடம் இரண்டு) 

ஒரு ஆண், பெண் துணையின்றி, ஒரு பெண், ஆண் துணையின்றி வேறு வழிகளில் தங்களின் இச்சையைத் தணிக்கக் கூடாது. திருமணம் செய்ய வசதியற்ற சூழ்நிலையில் உள்ள பலர் தங்களின் இச்சைகளை தணித்துக் கொள்வதில் முயலும் வழிகளில் சுய இன்பமும் ஒன்று. 

அல்லாஹ் கூறுகிறான்: 

மேலும் அவர்கள் தங்களுடைய வெட்க தளங்களைக் காத்துக் கொள்வார்கள்' 

ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ, அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டு ) நிச்சயமாக அவர்கள் பலிவாங்கபடமாட்டார்கள். 

ஆனால், இதற்க்கு அப்பால் (வேறு வழிகளில் ) எவர் நாடுகிறாரோ, அத்தகையவர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள். (அல்குரான் : 23-5,6,7,)

திருமணம் மூலமே தவிர வேறு வழிகளில் தங்களின் இச்சைகளை தனித்துக் கொள்ள கூடாது என்றும், மீறி நடப்போர் வரம் மீறியவர்கள் என்றும் இவ்வசனம் தெளிவுபடக் கூறுகிறது எனவே சுய இன்பம் கூடவே கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். 

வாலிபர்களே ! உங்களில் எவருக்கேனும் (திருமணம் செய்ய ) வசதி இருந்தால் அவர் திருமணம் செய்யட்டும். அது (தவறான வழிகளை விட்டும் ) பார்வையைத் தடுக்கும். திருமணம் செய்ய வசதி இல்லை என்றால் அவர் நோன்பு வைக்கட்டும். அது (தவறு செய்வதில் இருந்து) அவரை தடுக்கும். 

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊது (ரலி) நூல் : புகாரி. 

திருமணம் செய்ய வசதியற்றவர்கள் தங்கள் ஆசையை கட்டுப்படுத்த நோன்பு வைப்பது தான் சிறந்த வழி என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவதால் சுய இன்பம் போன்ற பழக்கத்தை எந்த ஆணும், பெண்ணும் மேற்கொள்ள கூடாது.

மனைவியின் மார்பகங்களை சுவைகலாமா? (அந்தரங்க பாடம் முன்று ) 

மார்பகங்களைச் சுவைத்தல் போன்ற காரியங்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. பால் இருப்பின் அது குழந்தைக்குரிய உணவு என்பதால் அதை தவிர்த்துக் கொள்ளலாம் என்று தான் கூரமுடியுமே தவிர. ஹராம் என்று கூறிவிட முடியாது. பால் குடித்து விட்டால் உறவு மாறி விடும். குழந்தை தாய் உறவு என்றாகி விடும் என்று சிலர் கூறுவர். இது தவறு என்பதை இந்த ஹதிஸ் முலம் நாம் அறியலாம். 

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: 

பால்குடி பருவத்தில் இரைப்பையைச் சென்றடையும் விதமான பாலுட்டுதல் தவிர மற்றவை (திருமண உறவை) ஹராமாக்காது. இது பால்குடி மறக்கடிக்கப் படுவதற்கு முன்பு நிகழ வேண்டும்.

அறிவிப்பவர் : உம்மூஸாமா (ரலி) நூல்: திர்மிதி. 

மேலும் குரானின் இந்த வசனமும் இதற்க்கு சான்று 

(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குரான் 2-233) 

மற்றும் 

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அல்குரான் 31-14) 

இந்த இரண்டு வசனங்கள் படி பால்குடி வயது என்பது அதிகபட்சம் இரண்டு வருடங்கள் என்பது விளங்குகிறது. எனவே அந்த வயதுக்கு மேல் உள்ள ஒருவன் தன் மனைவியிடம் பால் குடித்துவிட்டால் மகனாகி விடுவான் என்று சொல்வது தவறு. 

தனது மனைவியின் மார்பகங்களை சுவைக்கலாம் இதற்க்கு இஸ்லாத்தில் தடை இல்லை. 

மலப்பாதையில் உடலுறவு செய்யலாமா ? ( அந்தரங்க பாடம் நான்கு )

உடலுறவு அதற்குரிய வழியில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து மலப்பாதையில் உடலுறவு கொண்டு விட கூடாது. உடலுறவுப் பாதையை விடுத்து வேறு வழிகளில் தங்களின் இச்சையைப் பூர்த்தி செய்தல் கூடாது என்ற காரணத்திற்காகவும், 

உடலுறவின் நோக்கம் இருவரும் இன்புருவது தான்; இந்த இன்பத்தை இருவருமே ஆணுபவிக்க வேண்டும்; மலப்பாதையில் உறவு கொண்டால் பெண் இன்பம் அடையும் நிலையே ஏற்படாது. மாறான நிலையே ஏற்படும். இது கூடாது என்ற காரணத்திற்காகவும். 

உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; (அல்குரான் 2:223 )

என்று அல்லாஹ் கூறுகிறான். விளைநிலம் என்றால் பெண்ணின் மர்மஸ்தானத்தை குறிப்பாக உடலுறவு பாதையையே குறிக்கும். காரணம் விந்தின் மூலம் குழந்தை எனும் பயனைத் தரும். விளைநிலமே மர்மஸ்தானம் என்ற காரணத்திற்காகவும் உடலுறவுக்காக மரைவுறுப்பைத் தவிர மலப்பாதையைத் தேர்ந்தெடுப்பது கூடாது என்பதை புரியலாம்.நோன்பின் இரவில்  

உடலுறவு கொள்ளலாமா ? ( பாடம் ஐந்து) 

நோன்பின் பகலில் தான் உடலுறவு கொள்ளக் கூடாதே தவிர இரவில் தாராளமாக, உடலுறவில் ஈடுபடலாம். சிலர் ரமலான் இரவிலும் கூட உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று கருதி ஒதுங்கியே வாழ்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். இரவில் உடலுறவில் ஈடுபடலாம் என்பதற்கு பின்வரும் இறைவசனம் சான்றாகும். 

அல்லாஹ் கூறுகிறான். 

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குரான் 2:187 )

 உடலுறவின் போது பேசலாமா? ( பாடம் ஆறு ) 

உடலுறவில் ஈடுபடும் போது பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதிகமாக பேச கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்க்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கூறுகின்றனர். 

உடலுறவு கொள்ளும் போது அதிகம் பேசாதிர்கள். பேசினால் ஊமைத் தன்மை (அல்லது) திக்கு வாய் ஏற்படும். 

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் ஹதிசை இப்னு அசாகிர் அவர்கள் பதிவு செய்து உள்ளார்கள். ஆனால்.!

இந்த ஹதீஸ் சரியான இல்லை. இதில் ஸுகைர் இப்னு முஹமது அல்குராசனி என்ற பலவீனர் இடம் பெறுகிறார். எனவே இது நபி(ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக் கட்டப்பட்டதாகும். 

உடலுறவின் போது பேசுபவர்களே அதிகம். பேசுபவர்கள் ஊமையாகிவிடுவர். திக்குவாய்களாகி விடுவர் என்பது உண்மையானால் ; உலகில் இன்று பலர் அந்த நிலைக்கு வந்து இருக்க வேண்டும். இப்படி ஆகவில்லை என்பதிலிருந்தே இது ஒரு இட்டுகட்டப் பட்ட செய்தியே என்பது தெளிவாகிறது.. 

எனவே உடலுறவின் போது பேசலாம். தவறு இல்லை.

 மர்மஸ்தானத்தை சுவைக்கலாமா? ( பாடம் ஏழு ) 

இது சம்மந்தமாக பல தம்பதிகளிடையே பலத்த சந்தேகம் உள்ளது. மர்மஸ்தான உறுப்புகள் அசிங்கமான உறுப்புக்கள் என்பது பலரது எண்ணம். ஆனால் அவை அசிங்கமான உறுப்புகள் அல்ல. உடலின் இதர உறுப்புக்கள் போன்று தான் மர்ம உறுப்பும். 

தல்க் இப்னு அலி(ரலி) அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் அவர் உளுச் செய்வது அவசியமா ? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதுவும் உனது உறுப்புகளில் ஒன்று தானே என நபி(ஸல்) பதில் அளித்தார்கள். (நூல் : திர்மிதி )

எனவே மர்ம உறுப்பை அசிங்கமாக கருத வேண்டியது இல்லை. கணவனும், மனைவியும் இச்சை உணர்வை அதிகபடுத்த இதர உறுப்புகளில் சரச விளையாட்டுகளில் ஈடுபடுவது போல மர்ம உறுப்பையும் பயன்படுத்துவதில் தவறில்லை. 

அதே வேலையில் உடலுறவில் ஈடுபடும் முன் இச்சையின் அறிகுறிக்கு காமநீர் வெளிப்படும் இந்த காம நீர் அசுத்தமானது என்பதை ஹதிஸ் முலம் புரிய முடிகிறது. 

அலி(ரலி) அறிவிக்கிறார்கள்: 

நான் அதிகம் மதி (காமநீர்) ஏற்படுபவனாக இருந்தேன். என்கீல் நபி(ஸல்) அவர்களின் மகளார் மனைவியாக இருந்ததால் இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கமுற்றேன். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்க சொல்லி இப்னு அஸ்வத்(ரலி) அவர்களை வேண்டினேன். அவர் கேட்ட போது. "உன் மர்மஸ்தானத்தை கழுவு! உலூச் செய்! என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள். (நூல் : புகாரி ) 

காமத்தின் சூழல் காரணமாக தம்பதியர் மர்மஸ்தானத்தை சுவைக்கும் செயலில் ஈடுபட்டாலும் காமநீர் அசுத்தமானது என்பதை புரிந்து அசுத்தத்தை உட்கொள்ளுவது சரி அல்ல என்பதையும் புரிந்து கொள்ளல் அவசியமாகும்.

 1-தல்க் இப்னு அலி(ரலி) அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் அவர் உளுச் செய்வது அவசியமா ? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதுவும் உனது உறுப்புகளில் ஒன்று தானே என நபி(ஸல்) பதில் அளித்தார்கள்

2- 'எவர் தனது மர்ம உறுப்பைத் தொட்டு விடுகிறாரோ அவர் உளூச் செய்யாமல் தொழவேண்டாம்' (உளூ செய்து தொழுது கொள்ளட்டும்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி).நூல்கள்-தப்ரானி மற்றும் தாரகுத்னி.

மேலே உள்ள முதல் ஹதீஸ், அஹ்மத், அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. இரண்டாவது ஹதிஸ் திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள இரு ஹதீஸ்கள், இரு முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளது. அவ்விரண்டும் நிராகரிக்க முடியாத 'ஸஹீஹ்' தரத்திலும், ஆதாரபூர்வமான ஹதீஸாகவும் உள்ளது. இதனை இணைத்து நாம் ஒரு முடிவு செய்யவேண்டும். 
நபி (ஸல்) அவர்களின் கூறியதிலிருந்து 'அதுவும் உமது உறுப்புதானே' என்றதன் கருத்து, ஒருவர் தனது பிறப்புறுப்பை (மர்மஸ்தானத்தை) தற்செயலாக தொட்டாலோ அல்லது அவைகளின் தனித்தன்மையை அறியாது தொட்டாலோ உளூ நீங்காது. பிறப்புறுப்பின் தனித்தன்மையை அறிந்து ஒரு நோக்கத்துடன் (இச்;சையுடன்) தொடுவாராயின் உளூ நீங்கும் என முடிவு செய்யவேண்டும்.
இப்படியும் விளங்கலாம், முதல் ஹதீஸ் நோக்கமின்றி (இச்சையின்றி) மற்ற உறுப்புக்களை தொடுவது போல் தொடுவதால் உளூ நீங்காது எனவும், இரண்டாவது ஹதீஸ் இச்சையுடன் (நோக்கத்துடன்) அதனை தொடுவதால் உளூ நீங்கி விடுகிறது மீண்டும் தொழுகைக்காக உளூ செய்தல் அவசியமாகின்றது. இப்படி எடுத்துக்கொண்டால் முரண்பாடின்றி விளங்கிக்கொள்ளலாம். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

 ஓரினச் சேர்க்கை மூலம் இசையைத் தீர்கலாமா? ( பாடம் எட்டு ) 

ஆணுடன் ஆணும, பெண்ணுடன் பெண்ணும் இணைந்து தங்களின் இச்சையைத் தீர்ப்பது என்பது கூடாது. ஆணுடன் ஆண் - அதாவது ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் உறவு கொண்டு வாழ்வது சில நாடுகளில் பரவலாக நடைபெற்று வருகிறது இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். 

மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?”“மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.” (அல்குரான் : 7:80-81) 

இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.(அல்குரான் : 7:84 ) 

எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. (அல்குரான் : 11:82- 83 ) 

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: 

"ஒரு ஆண் மற்றொரு ஆணின் மறைவிடத்தைப் பார்க்கக் கூடாது. ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மறைவிடத்தைப் பார்க்கக் கூடாது. ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் ஒரே ஆடையில் (நிர்வாணமாக) கட்டி அணைத்தல் கூடாது" (நூல்: முஸ்லிம்) 

லூத் நபி(ஸல்) அவர்களின் மக்கள் செய்த செயலை எவரேனும் செய்யக்கண்டால் (அந்த செயலை) செய்தவனையும், செய்யப்பட்டவனையும் கொலை செய்து விடுங்கள். ( அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அஹ்மத்) 

ஓரினச் சேர்க்கை கூடாது என்றும், அதை செய்வோரை கொலை செய்து விட வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுவதால் இதுபோன்ற வழிகளில் தங்களின் இச்சையை எந்த ஆணும. பெண்ணும் தணிக்க கூடாது.

இன்ஷாஅல்லாஹ் தொடரும் :-

Friday, May 10, 2013

கருத்தரிப்பதை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள்!!!

கருத்தரிப்பதை அதிகரிக்கும் சில இயற்கை வழிகள்!!! 




குழந்தைகளை விரும்பாதார் இவ்வுலகில் உண்டோ? திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தம்பதிகளின் பெற்றோர் விரும்புவர். இரண்டு ஆண்டுகள் சச்தோஷமாக இருந்துவிட்டு பின் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று இப்போதுள்ள இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள். 
 
ஆனால் குழந்தைப்பேறு என்பது நாம் எண்ணிய வண்ணம் நடக்காது. உடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய வேண்டும். மேலும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், பலர் கருத்தரிக்க முடியாமல் இருக்கின்றனர். ஏனெனில் இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள், வலிமை குறைந்து, மன அழுத்தம் அதிகரித்து, நல்ல இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவாறு இருக்கின்றன. எனவே, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், கீழே குறித்துள்ள ஆலோசனைகளை பின்பற்றி வந்தால், அவை கருவுறும் திறனை மேம்படுத்தும்.
 
குளிர்ச்சியான சூழல் 
 
ஆண்களின் விந்தணுக்கள், குளிர்ச்சியான சூழலில் நன்கு உற்பத்தியாகின்றன. மடியிலேயே கணிப்பொறியை வைத்துக் கொண்டு பணிபுரியும் ஆண்களுக்கு, விந்துக்களின் உற்பத்தி மற்றும் கருத்தரிக்கும் திறன் குறைவாக இருக்கும். மேலும் ஆண்கள் நீண்ட நேரம், வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெந்நீரில் குளித்தவர்கள், குளிர்ந்த நீரில் குளிக்கத் தொடங்கியதால், ஆண்களின் விந்தணு உற்பத்தி ஐந்து மடங்காகப் பெருகியதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், உடலை இறுக்கிப் பிடிக்கும், கால் சட்டைகளைத் தவிர்த்து, தொளதொளவென்றிருக்கும், பாக்ஸர் கால் சட்டைகளை அணிய வேண்டும்.
 
சூரிய வெளிச்சத்தில் குளிக்கவும் 
 
சூரிய வெளிச்சமானது, வைட்டமின் டி-யை உற்பத்தி செய்யவும், கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஆண், பெண் என இருபாலாருக்குமே தான். மேலும் பெண்களுக்கான பாலின ஹார்மோன்களான மாத விலக்கை நெறிப்படுத்தும், புரோஜெஸ்டிரோன் மற்றும் கருவுறும் திறனைக் கட்டுப்படுத்தும் ஈஸ்டிரோஜென் ஆகியவற்றின் அளவை அதிகரிக்க வைட்டமின் டி உதவுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக வைட்டமின் டி-யானது, ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
 
மன அழுத்தத்தைக் குறைக்கவும்
 
பதட்டமும், மன அழுத்தமும், பெண்களின் கருவுறும் தன்மையை வெகுவாகப் பாதிப்பதோடு, ஆண்களின் உயிரணு உற்பத்தி வீதத்தையும் மட்டுப்படுத்துகின்றன. மேலும், பாலியல் இச்சையையும் குறைக்கின்றன.
 
பால் பொருட்களை சாப்பிடவும் 
 
முழுக் கொழுப்புள்ள பாலை, பெண்கள் தினமும் பருகி வந்தால், மலட்டுத்தன்மையானது 25% க்கு மேல் குறைந்ததாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண்களின் கருமுட்டைப்பைகள் நன்கு வேலை செய்ய, இந்த பால் கொழுப்புக்கள் உதவுகின்றன.
 
மல்டி வைட்டமின் மாத்திரைகள் 
 
கருவுறுதலுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 மற்றும் செலினியம் ஆகியவை அடங்கிய மல்டி வைட்டமின் மருந்து மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால், கருவுறும் திறன் இரண்டு மடங்கு அதிகமாகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
புகைப்பிடிப்பதை நிறுத்தவும் 
 
புகைப்பிடிக்கும் ஆண்கள் மலட்டுத்தன்மை அடைய 50% வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களது உயிரணு எண்ணிக்கையும் மிகக்குறைவாகவே இருக்கும். புகைப்பிடிக்கும் பெண்கள் புகைப்பிடிக்காத பெண்களை விட 30% குறைவாகவே கருத்தரிக்கும் விகிதத்தைப் பெறுகின்றனர். ஏனெனில் புகைப்பது, கருப்பையில் சிசு தங்குவதைத் தடுக்கிறது.
 
மது அருந்தும் முன் யோசிக்கவும் 
 
குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், அருந்தும் மதுவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. அதிக அளவு மது அருந்துவது கருமுட்டை உற்பத்தியையும், விந்தணு உற்பத்தியையும் வெகுவாகப் பாதிக்கின்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
 
மென்பொருட்கள் 
 
தற்போது நிறைய மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், மாதவிலக்கு நாட்காட்டி, கருத்தரிக்க வழிகாட்டி, (Period Diary, Fertility Friend, Menstrual Calendar) போன்றவை உடல் வெப்பம், பருவ சுழற்சி ஆகியவற்றைக் கொண்டு கணக்கிட்டு, எந்தத் தேதியில், தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவிக்கும். ஆகவே இதுபோன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி, உறவில் ஈடுபடுவது நல்லது.
 
தாம்பத்திய உறவு 
 
வாரத்தில் ஒரு முறை தாம்பத்திய உறவு கொள்ளும் தம்பதியருக்கு கருவுறும் வாய்ப்பு 15% அதிகரிப்பதாகவும், அதுவே வாரத்திற்கு மூன்றிலிருந்து நான்கு முறை தாம்பத்திய உறவு கொள்ளும் தம்பதியர்க்கு கருவுறும் வாய்ப்பு 50 % அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. தாம்பத்திய உறவானது ஆண் உயிரணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ஆண்களின் உயிரணுக்களானது மூன்று நாட்களுக்கு மேல் உடலிலேயே தங்கியிருந்தால், அதன் தரம் குறைகிறதாம்.
 
 
 பெண்களது மாதவிலக்கு
 
சுழற்சியின் அடிப்படையில், குழந்தை உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ள நாள்களைக் கணக்கிட்டு அறிந்து கொள்ளுங்கள். சராசரியாக 28 நாள்கள் மாதவிலக்கு சுழற்சி உள்ள பெண்களுக்கு, 10 ஆம் நாள் முதல் 17 ஆம் நாள் வரையான காலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நாள்களாகும். இத்தகைய நாட்களின் கணக்கீட்டை ஓவுலேசன் கால்குலேட்டர் மூலம் தெரிந்து கொண்டு, பின் அதற்கேற்றாற் போல் உறவில் ஈடுபட்டால், விரைவில் கருத்தரிக்கலாம்.